CricketArchive

சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி அணி
by CricketArchive


Ground:MA Chidambaram Stadium, Chepauk, Chennai
Scorecard:Chennai Super Kings v Delhi Daredevils
Player:V Sehwag
Event:Indian Premier League 2007/08

DateLine: 2nd May 2008

 

போட்டி : 20 ஓவர்கள் போட்டி(இரவு ஆட்டம்), 20-வது தகுதிச் சுற்று ஆட்டம்
இடம் : எம்.ஏ. சிதம்பரம் மைதானம். சேப்பாக்கம், சென்னை.
தேதி : 02.05.2008. வெள்ளிக் கிழமை.
மோதிய அணிகள் : சென்னை அணி - டெல்லி அணி
முடிவு : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
ஆட்ட நாயகன் : வீரேந்திர ஷேவாக

 

வணக்கம்

 

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 20-வது தகுதிச் சுற்று ஆட்டம் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதின.இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

சென்னை அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர்களான மேத்யூ ஹைடனும் மைக் ஹஸ்ஸியும் சொந்த மண்ணில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று விட்டதால், அவர்களுக்கு பதிலாக நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் பிளெமிங், தென்னாப்பிரிக்க வீரர் மகாய நிதினி ஆகியோர் சென்னை அணியில் சேர்க்கப்பட்டனர். டி வில்லியர்ஸ், சோயிப் மாலிக் இருவரும் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

பூவா தலையா வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.பார்தீவ் படேலும், ஸ்டீபன் பிளெமிங்கும் தொடக்க ஆட்டக்கார்ரகளாக களமிறங்கினர்.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை யோ மகேஷ் வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் ஸ்டம்புகளை பறி கொடுத்தார் ஸ்டீபன் பிளெமிங். ஆனால் அந்த பந்து 'நோ பால்' என அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசிய ஸ்டீபன் பிளெமிங் 13 ரன்கள் எடுத்திருந்த போது, அதே ஓவரில் யோ மகேஷ் பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து பார்தீவ் படேலுடன் வித்யுத் சிவராமகிருஷ்ணன் ஜோடி சேர்ந்தார்.

பார்தீவ் படேல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து சென்னை அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி, வித்யுத் சிவராமகிருஷ்ணனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடினர். வித்யுத் சிவராமகிருஷ்ணன் 37 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஏழு பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் எடுத்து மெக்ரத் பந்து விச்சில் ஆட்டமிழந்தார்.

மஹேந்திரசிங் தோனி 27 பந்துகளில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அல்பி மோர்கெல் 16 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், மூன்று பவுண்டரிகள் உள்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் ராய்னா 3 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

சுப்ரமணியம் பத்ரிநாத் 11 ரன்களுடனும், ஜோகீந்தர் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நேர முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணி சார்பில் மெக்ரத், முகமது ஆசிப், யோ மகேஷ், வீரேந்திர ஷேவாக், ரஜத் பாடியா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்கார்ர்களாக களமிறங்கிய வீரேந்திர ஷேவாக்கும், கெளதம் காம்பீரும் ஆரம்பம் முதலே தங்களது அதிரடியை காட்டத் தொடங்கினர்.

வீரேந்திர ஷேவாக் 41 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள், ஏழு பவுண்டரிகள் உள்பட 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கெளதம் காம்பீர் 37 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஐந்து பவுண்டரிகள் உள்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டி வில்லியர்ஸ் 26 ரன்களுடனும், ஷீகர் தவான் 19 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இத்தொடரில் தான் ஆடிய நான்கு ஆட்டங்களிலிலும் தொடர் வெற்றியைப் பெற்று வந்த சென்னை அணி இந்த ஆட்டத்தில் முதல் தோல்வியைப் பெற்றது.

அதிரடியாக விளையாடி 71 ரன்கள் குவித்த டெல்லி அணியின் கேப்டன் வீரேந்திர ஷேவாக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 8 புள்ளிகள் பெற்று சென்னை அணியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது.

சென்னை அணி வருகின்ற மே 4-ம் தேதி ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது.

நன்றி, வணக்கம்

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive