Scorecard: | Sri Lanka v India |
Event: | India in Sri Lanka 2008 |
DateLine: 1st August 2008
வணக்கம்.
காலேவில் இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுற்றது. முன்னதாக ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில்நேற்று துவங்கியது.
நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருந்தது.
வீரேந்திர ஷேவாக் 128 ரன்களுடனும், இவருக்கு ஒத்துழைப்பு தந்த வி.வி.எஸ்.லட்சுமண் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது.
சிறப்பாக ஆடிவந்த வி.வி.எஸ்.லட்சுமண் 39 ரன்கள் எடுத்திருந்தபோது அஜந்தா மெண்டிஸ் சுழலில் சமரவீராவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த இந்திய வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை, முதல் டெஸ்டில் விளையாடியது போலவே ஆடினர்.
இம்முறையும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஹர்பஜன்சிங் 1 ரன்னிலும், இஷாந்த் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்ந்தனர். இவர்கள் மூவரும் அஜந்தா மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தனர். அனில் கும்ப்ளே 4 ரன்களும், ஜாகீர்கான் 2 ரன்களும் எடுத்திருந்தபோது முரளிதரன் சுழலில் வீழ்ந்தனர்.
தனி ஒரு ஆளாக நின்று இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் இரட்டை சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 231 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள் உள்பட 201 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஒருதினப்போட்டிபோல் ஆடிய ஷேவாக் அஜந்தா மெண்டிஸ் பந்து வீச்சை இந்த இன்னிங்ஸில் விரட்டியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மெண்டிஸ் வீசிய 77 பந்துகளை சந்தித்த ஷேவாக் அதில் 3 சிக்சரகள், 5 பவுண்டரிகள் உட்பட 70 ரன்கள் எடுத்து, மிரட்டினார். இவரை அஆட்டமிழக்க வைக்க, மெண்டிஸ் செய்த முயற்சிகள் கடைசி வரை பலனளிக்கவில்லை.
இலங்கை சார்பில் அஜந்தா மெண்டிஸ் 117 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இது இவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸை துவக்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக வான்டார்ட்டும், வர்ணபுராவும் களமிறங்கினர். வான்டார்ட் 4 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாகீர்கான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ராகுல் திராவிட்டிடம் பிடி கொடுத்து வெளியேறினார். இவரையடுத்து வர்ணபுராவுடன், குமார் சங்ககாரா ஜோடி சேர்ந்தார்.
இவர்களிருவரும் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர். வர்ணபுரா 66 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன்சிங் சுழலில் வீழ்ந்தார். இவரையடுத்து குமார் சங்ககாராவும் 68 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன்சிங் சுழலில் வீழ்ந்தார்.
இவரையடுத்து இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனேவும், சமரவீராவும் ஜோடி சேர்ந்தனர். சமரவீரா 14 ரன்கள் எடுத்திருந்த போதும், தில்ஷான் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் ஹர்பஜன்சிங் சுழலில் வீழ்ந்தனர்.
இவர்களையடுத்து மஹேல ஜெயவர்தனேவுடன், விக்கெட் கீப்பர் பிரசன்ன ஜெயவர்தனே ஜோடி சேர்ந்தார்.
மஹேல ஜெயவர்தனே 46 ரன்களுடனும், இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரசன்ன ஜெயவர்தனே 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் ஹர்பஜன்சிங் 4 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதம் உள்ளது.
**** இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
@இந்திய அணியின் மொத்த ரன்களில் 61.09 சதவீதம் ஷேவாக் எடுத்தது. இதன்மூலம் ஓர் இன்னிங்சில் அணியின் மொத்த ரன்னில் அதிக சதவீத ரன்களை எடுத்த வீரர்கள் வரிசையில் 11வது இடத்தையும், இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தையும் ஷேவாக் பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் வரிசையில் முதலிரண்டு இடத்தை கொல்கத்தா டெஸ்டில் 261 ரன்கள்(63.98 சதவீதம்) எடுத்த வி.வி.எஸ்.லட்சுமண் மற்றும் கிங்ஸ்டன் டெஸ்டில் 60 ரன்கள் சேர்த்த அமர்நாத் (61.85 சதவீதம்) கைப்பற்றியுள்ளனர்.
@இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையையும், அதிக ரன்கள் அடித்தவர் வரிசையில் 201 ரன்களுடன் முதலிடத்தையும் ஷேவாக் பிடித்தார். இரண்டாமிடத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முகமது அசாருதீன் டிசம்பர் 17, 2006-ல், கான்பூரில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக, 199 ரன்கள் எடுத்தார்.
@துவக்க வீரராக களமிறங்கிய ஷேவாக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டெஸ்டில் இச்சாதனை படைத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக 1983-ல் நடந்த, பாகிஸ்தானுக்கு எதிரான பைசலாபாத் டெஸ்டில், துவக்க வீரராக வந்த கவாஸ்கர் 127 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
@டெஸ்ட் அரங்கில் 5வது முறையாக இரட்டைசதம் கடந்த ஷேவாக், டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டைசதம் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை திராவிட்டுடன் பகிர்ந்து கொண்டார். சச்சின், கவாஸ்கர் தலா 4 இரட்டைசதம் கடந்துள்ளனர்.
@வீரேந்திர ஷேவாக் முதல் இன்னிங்ஸில் 149வது ரன் எடுத்த போது, டெஸ்டில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 15 சதங்கள், 13 அரைசதங்கள் உள்பட 5,052 ரன்கள் எடுத்துள்ளார்.
நன்றி, வணக்கம்
LATEST SCORES
CURRENT EVENTS
- Hong Kong Quadrangular International Twenty20 Series 2024/25
- ICC Men's Cricket World Cup League Two 2023/24 to 2027
- ICC Women's Cricket World Cup Qualifier 2024/25
- ICC World Test Championship 2023 to 2025
- Kartini Cup 2024/25
- Norway in Portugal 2025
- Norway Women in Portugal 2025
- Pakistan in New Zealand 2024/25
- Sri Lanka Women's Tri-Series 2024/25
- Uganda Women in Namibia 2024/25
- Zimbabwe in Bangladesh 2024/25
View all Current Events CLICK HERE
