CricketArchive

கௌதம் காம்பீர்
by CricketArchive


Player:G Gambhir

DateLine: 18th August 2008

 

முழுப்பெயர்: கௌதம் காம்பீர்

 

பிறப்பு: 14 அக்டோபர் 1981. தில்லி. இந்தியா.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: இடதுகை சுழற்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: பேட்ஸ்மேன்

 

விளையாடும் அணிகள்: இந்தியா, டெல்லி, டெல்லி டேர் டெவில்ஸ், இந்தியா ரெட், இந்தியா பிரெசிடென்ட் லெவன், ராஜஸ்தான் பிரெசிடென்ட் லெவன்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: நவம்பர் 3-5, 2004, இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: ஏப்ரல் 11, 2003 அன்று இந்தியா - வங்கதேசம் இடையே தாஹாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: செப்டம்பர் 13, 2007 அன்று இந்தியா - ஸ்காட்லாந்து இடையே டர்பனில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இந்திய அணியில் வளர்ந்து வரும் இடதுகை ஆட்டக்காரர். சிறந்த துவக்க ஆட்டக்காரர். சௌரங் கங்குலிக்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் இடதுகை ஆட்டக்காரர்.

 

2002-ல் ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த போது இவர் இரண்டு முறை இரட்டை சதங்களை அடித்து அசத்தினார். இந்திய மண்ணில் இரட்டை சதங்கள் அடித்து சுனில் கவாஸ்கர், திலிப் வெங்சர்க்கார், சச்சின் தெண்டுல்கரையடுத்து நான்காவது வீரராக தன்னையும் இணைத்துக் கொண்டார். இதையடுத்து இந்திய அணிக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார்.

 

2003-ல் நடைபெற்ற டி.வி.எஸ். கோப்பைக்கான போட்டியில் இவர் அறிமுகமானார். இவர் ஆடிய மூன்றாவது ஒருதினப் போட்டியில் 71 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இவரே அப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 

2004 -ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக விளையாடினார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 96 ரன்கள் குவித்தார். வங்கதேசத்திற்கு எதிராக 2004-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

 

அதன்பிறகு அணியில் இடம் பிடிப்பதும், நீக்கப்படுவதுமாக இருந்தார். 2007 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆரம்பத்திலேயே வெளியேறியதால், பல முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாமல் காம்பீர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

 

அதன்பிறகு வங்கதேசம் சென்ற ஒருதின அணியில் இடம்பிடித்தார். அப்போட்டியில் அருமையாக விளையாடி சதமொன்றையும் விளசினார். இதனால் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தார். அதன் பிறகு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி தென்னாப்பிரிக்க அணியையும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்துவதற்கு இவரது ஆட்டம் முக்கிய காரணிகளாக அமைந்தது. அப்போட்டித் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 75 ரன்கள் உள்பட நான்கு அரைசதங்கள் என மொத்தம் 299 ரன்கள் விளாசி, இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்தவர் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காராராக விளையாடினார். இவரது ஆட்டமே அந்த அணி காலிறுதிப் போட்டி வரை முன்னேற வழிவகுத்தது. அப்போட்டித் தொடரில் 5 அரைசதங்கள் உள்பட 534 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தார்.

 

இதையடுத்து வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தெடரில் சிறப்பாக விளையாடி ஒரு சதம், ஒரு அரை சதம் உள்பட 209 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர் வரிசையில் முதலிடம் பிடித்தார்.

 

அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து விளையாடினார். 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உள்பட 310 ரன்கள் குவித்தார்.

 

இவர் திறமை வாய்ந்த இளம் வீரர் என்பது மட்டுமல்ல, அதிரடியான இடதுகை துவக்க ஆட்டக்காரர் ஆவார்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive