Event: | India in Sri Lanka 2008 |
DateLine: 19th August 2008
கொழும்பு, ஆகஸ்டு, 19: கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இலங்கைக்கெதிரான ஓரு தினத் தொடரில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் பங்கேற்க மாட்டார் ஏன அறிவிக்கப்பட்டுள்ளது.
தம்புல்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஒருதினப் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் பரிதாபமாக இழந்தது. இதனையடுத்து இன்று முதல், 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடர் நேற்று முதல் துவங்கியது.
தம்புல்லவில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி மேற்கொண்டபோது வீரேந்திர ஷேவாக்குக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், இவர் தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஓரு தின ஆட்டத்தில் மட்டும் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவருக்கு பதிலாக விராட் கோஹ்லி இடம் பெற்றார். இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியசத்தில் பரிதாபமாக தோற்றது.
தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி கூறும்போது ''வீரேந்திர ஷேவாக் இல்லாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது'' என குறிப்பிடிடிருந்தார்.
இந்நிலையில் வீரேந்திர ஷேவாக்கிற்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் குணமாக அதிக காலம் ஆகலாம் என்பதால் இனி வரும் 4 ஆட்டங்களிலும் அவர் பங்கேற்கமாட்டார் என இந்திய அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வீரேந்திர ஷேவாக் இல்லாமல் மீதமுள்ள 4 ஒருதினப் போட்டிகளில் இலங்கை அணி எதிர்கொள்ள உள்ளது.