Player: | M Muralitharan |
DateLine: 19th August 2008
முழுப்பெயர்: முத்தையா முரளிதரன்
 
பிறப்பு: 17 ஏப்ரல் 1972. கண்டி, இலங்கை. 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
அணியில் வீரரின் நிலை: சுழற்பந்து வீச்சாளர். 
பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர் 
விளையாடிய அணிகள்: இலங்கை, ஆசிய லெவன், சர்வதேச கிரிக்கெட் வாரிய உலக லெவன். கண்டுரட்டா அணி, கென்ட், லாங்கஷையர், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், சென்னை சூப்பர் கிங்ஸ். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 28- செப் 2, 1992 அன்று இலங்கை- ஆஸ்திரேலியா இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிஒருதினப் போட்டி: ஆகஸ்ட் 12, 1993 அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்புவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூன் 22, 2005 அன்று யார்க்ஷையர் - லாங்கஷையர் இடையே லீட்ஸில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இலங்கை அணியின் சுழற்பந்து நம்பிக்கை நட்சத்திரம். இந்த அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் சிறந்த பந்து வீச்சாளர். கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுபவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன. ஒரு டெஸ்ட் போட்டியில் சராசரியாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர் முரளிதரன். 
சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972, நத்தரன்பொத்த், குண்டசாலையிலுள்ள கண்டியில் முரளிதரன் பிறந்தார். ஸ்ரீதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி, புனித அந்தோனியர் கல்லூரியில் பள்ளிக்கல்வியை பயின்ற முரளிதரன், பள்ளியின் கிரிக்கெட் அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். 
பள்ளி அணியில் விளையாடிய காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பள்ளி அணியிின் பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் ''பள்ளிகளுக்கு இடையேயான சிறந்த கிரிக்கெட் வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தில் இணைந்து தனது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்தார். 
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக இவர் விளையாடியதால், ஜூலை 1992-ல் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்திய அணிக்கெதிரான ஒரு தினத் தொடரில் இடம்பிடித்தார். 
ஏப்ரல் 10, 2008 அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்புவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் முதன்முதலாக சர்வதேச ஒருதினப்போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக இவர் ஆகஸ்ட் 28- செப் 2, 1992 அன்று இலங்கை- ஆஸ்திரேலியா இடையே கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். 
இவரது சுழற்பந்து வீச்சிற்கு சர்வதேச அணிகள் பலவும் சரண்டைந்திருக்கின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல் இவரது சாதனைகளில் ஒன்றை சொன்னாலே போதும். 
27 ஆகஸ்ட், 1998-ல், இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் இலங்கை அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழத்தியவர், இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை சாய்த்தார். 10 வது விக்கெட் ரன் அவுட் முறையில் ஆனது. இல்லையேல் அதையும் இவர் வீழ்த்தியிருப்பார். 
2001-02-ல் ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தது. இரு அணிகளும் கண்டியில் மோதிய இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 51 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் அரங்கில் இதுவே இவரது சிறந்த பந்துவீச்சாகும். இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இப்போட்டியின் ஆட்டநாயகன் மட்டுமின்றி (3 டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளுடன்) இத்தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 
ஒருதினப் போட்டிகளிலும் இவர் பல சாதனைகள் செய்துள்ளார். 2007 உலகக் கோப்பை போட்டியில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
கிரிக்கெட் உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் பத்திரிகை, 1999-ல் உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. 
முத்தையா முரளிதரனின் சாதனைகள் 
@1992 இல் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை 751 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 475 ஒருதின விக்கெட்டுகளையும் வீழத்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழத்தியவர்கள் வரிசையில் முதலிடத்தையும், ஒரு தின அரங்கில் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார். (ஒருதின அரங்கில்) முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் 502 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 
@டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டு என இரு வித ஆட்டங்களிலும் சேர்த்து இவர் 1253 சர்வதேச விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 
@ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாத்திரமே டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இருமுறைப் வீழ்த்தியவர்களாவர். 
@டெஸ்ட் தகுதி பெற்ற நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளை விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர். @டெஸ்ட் தகுதி பெற்ற நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பெற்ற ஒரே வீரர். 
@தொடர்ச்சியாக நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை பெற்ற ஒரே வீரர். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணி இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாமிடத்தைப் பிடித்தது. 
கிரிக்கெட்டில் தூஸ்ரா சுழற்பந்துவீச்சின் பிரம்மா இவர். இவர் தனது ஐந்து விரல்களாலும் பந்தை சுழற்றி வீசுகிறார். அது ஆப் பிரேக் முறையில் அதிகம் சென்று விக்கெட்டை பறிக்கிறது. 
310 ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 524 ரன்கள் எடுத்துள்ளார். 475 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
122 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இவர், 1 அரைசதம் உள்பட 1156 ரன்கள் எடுத்துள்ளார். 751 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
வெளியான தேதி: 5 ஆகஸ்டு 2008.LATEST SCORES
CURRENT EVENTS
- Australia Women in New Zealand 2024/25
- Bahrain in Singapore 2024/25
- Falkland Islands in Costa Rica 2024/25
- ICC Champions Trophy 2024/25
- ICC Men's Cricket World Cup League Two 2023/24 to 2027
- ICC Women's T20 World Cup Americas Region Qualifier 2024/25
- ICC World Test Championship 2023 to 2025
- Malaysia Tri-Nation International Twenty20 Series 2024/25
- Pakistan in New Zealand 2024/25
- Sri Lanka Women in New Zealand 2024/25
- The Pacific-France Women's Championship 2024/25
- Uganda International Twenty20 Quadrangular Series 2024/25
View all Current Events CLICK HERE
