| Player: | CK Kapugedera |
DateLine: 21st August 2008
முழுப்பெயர்: சமர கந்த கபுகேதரா
 
பிறப்பு: 24 பிப்ரவரி 1987. கண்டி, இலங்கை. 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
அணியில் வீரரின் நிலை: மட்டை வீச்சாளர். 
பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் 
விளையாடிய அணிகள்: இலங்கை, இலங்கை ஏ, கண்டுரட்டா அணி, சென்னை சூப்பர் கிங்ஸ், கொழும்பு கிரிக்கெட் கிளப். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: மே 11-15, 2006 அன்று இலங்கை - இங்கிலாந்து இடையே லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிஒருதினப் போட்டி: ஜனவரி 29, 2006 அன்று ஆஸ்திரேலியா - இலங்கை இடையே பெர்த்தில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: அக்டோபர் 9, 2005 அன்று கொழும்பு கிரிக்கெட் கிளப் - படுரேலியா ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இலங்கை அணியின் புதுமுக துவக்க ஆட்டக்காரர். இளம் துவக்க ஆட்டக்காரர். கண்டியில் பிறந்து வளர்ந்தவர். கண்டியிலுள்ள தர்மராஜா கல்லூரியில் தனது கல்விப்படிப்பை தொடர்ந்தபோதே கிரிக்கெட்டிலும் ஈடுபாடு காட்டினார். இதன் விளைவாக அனைத்து பள்ளிகளின் சார்பான 13 வயதிற்குள்பட்டோருக்கான அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். 2003-04 காலகட்டத்தில் இவர் 1000 ரன்கள் குவித்ததால், 19 வயதிற்குள்பட்டோருக்கான தேசிய அணியில் இடம்பிடித்து, பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் விளையாடினார். 
இதில் இவர் சிறப்பாக ஆடி தனது திறமையை வெளிப்படுத்தினார். 2005-ல் நியுசிலாந்து ஏ அணிக்கெதிராக 70 ரன்கள் குவித்து அசத்தினார். இத்திறமைகளைக் கண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் இவரை தேசிய அணியில் சேர்த்தது. 
இவர் முதலில், 2005-நவம்பரில் இந்திய அணிக்கெதிரான தொடரில் சேர்க்கப்பட்டார். ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் இவர் இத்தொடரில் விளையாடவில்லை. 
ஜனவரி 29, 2006 அன்று ஆஸ்திரேலியா - இலங்கை இடையே பெர்த்தில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில், சர்வதேச அளவில் முதன்முதலாக அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது 18. 
இவர் ஆடிய சில போட்டிகளில், இவரது நேர்த்தியான, அதிரடியான ஆட்டத்தைப் பார்த்த அணியினர், இவரை ஒருதினப் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். 
2006- மார்ச்சில் பாகிஸ்தானுக்கெதிரான ஒருதினப் போட்டியில் தனது முதலாவது அரைசதத்தை விளாசினார். 
இதன்காரணமாக 2006-ல் இங்கிலாந்து சென்ற டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். மே 11-15, 2006 அன்று இலங்கை - இங்கிலாந்து இடையே லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இத்தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிராக டிரென்ட்பிரிட்ஜில் நடைபெற்ற டெஸ்டில் தனது முதலாவது அரை சதத்தை விளாசினார். 
2008-ல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வங்கி தொடரில் அரைசதம் விளாசினார். 
2008 மார்ச்சில் மேற்கிந்தியத் தீவுகளில் இலங்கை அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையே போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் ஒருதினப்போட்டியில் அணியிலேயே அதிகபட்சமாக 95 ரன்கள் குவித்தார். இதுவே இவரது ஒருதினப் போட்டியில் அதிகபட்ச ரன்னாகும். 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணி இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாமிடத்தைப் பிடித்தது. 
அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உள்பட 209 ரன்கள் குவித்தார். 
இதையடுத்து இந்திய அணியுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரிலும், செப்டம்பரில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரிலும் இடம் பிடித்துள்ளார். 
வெளியான தேதி: 21 ஆகஸ்டு 2008.LATEST SCORES
CURRENT EVENTS
- Afghanistan and Sri Lanka in United Arab Emirates 2025/26
- Australia Women in West Indies 2025/26
- ICC Men's Cricket World Cup League Two 2023/24 to 2027
- ICC Men's T20 World Cup 2025/26
- ICC Men's T20 World Cup Sub Regional Americas Qualifier B 2025/26
- India Women in Australia 2025/26
- Kuwait in Hong Kong 2025/26
- Pakistan in Bangladesh 2025/26
- Pakistan Women in South Africa 2025/26
- South Africa in New Zealand 2025/26
- South Africa Women in New Zealand 2025/26
- Sri Lanka Women in West Indies 2025/26
- Thailand Quadrangular International T20 Series 2025/26
- Zimbabwe Women in New Zealand 2025/26
View all Current Events CLICK HERE


