CricketArchive

மஹேல உடவாட்டே
by CricketArchive


Player:ML Udawatte

DateLine: 25th August 2008

 

முழுப்பெயர்: மஹேல லக்மல் உடவாட்டே

 

பிறப்பு: 19 ஜூலை, 1986, கொழும்பு, இலங்கை.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: பேட்ஸ்மேன்

 

பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்ப்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இலங்கை, இலங்கை ஏ அணி, வயம்பா அணி, சிலாவ் மேரியன்ஸ் கிரிக்கெட் கிளப், ஆனந்தா கல்லூரி அணி, இலங்கை அகாதெமி லெவன்.
அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை
ஒருதினப் போட்டி: ஏப்ரல் 10, 2008 அன்று இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையே போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: செப்டம்பர் 15, 2005 அன்று சிலாவ் மேரியன்ஸ் கிரிக்கெட் கிளப் - பிசிஏ மாஸ்டர்ஸ் இடையே லீசெஸ்டரில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இலங்கை அணியின் வளர்ந்து வரும் இடதுகை துவக்க ஆட்டக்காரர். வருங்காலத்தில் சனத் ஜெயசூர்யாவின் இடத்தை நிரப்ப இருக்கும் இடது கை துவக்க ஆட்டக்காரர் என இவரது ஆட்டத்திறமையைக் கண்டவர்கள் புகழ்கிறார்கள்.

 

இலங்கையின் தலைநகரான கொழும்புவில் பிறந்து வளர்ந்தவர். கொழும்புவிலுள்ள ஆனந்தா கல்லூரியில், தனது பள்ளிப்படிப்பை பயின்றவர். அப்பள்ளியின் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாடினார். 2003 காலகட்டத்தில் அப்பள்ளி அணியின் சார்பாக விளையாடி 1000 ரன்களுக்கும் மேல் குவித்தார்.

 

இதன்பிறகு சிலாவ் மேரியன்ஸ் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து அந்த அணிக்காக விளையாடினார். பள்ளியில் விளையாடும்போது 3 வது வீரராக களமிறக்கப்பட்டவர், இந்த கிளப்பிற்கு வந்தபிறகு துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார்.

 

2004-05ல் 23 வயதிற்குள்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்து, 5 போட்டிகளில் விளையாடி 3 சதங்களை அடித்தார். மேலும் 2005-06 காலகட்டத்தில் இவரது கிளப்பிற்கான அணியில் விளையாடும் போது, நுவன் சொய்சா, தில்ஹாரா பெர்ணான்டோ உள்ளிட்ட வேகங்களை எதிர்கொண்டு 67 ரன்களை குவித்தார். இதனால் இலங்கை ஏ அணியில் சேர்க்கப்பட்டார்.

 

மேலும், 2007-ல் இங்கிலாந்து சென்ற இலங்கை ஏ அணியிலும் இடம்பிடித்தார். இத்தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்கள் உள்பட 151 ரன்கள் குவித்தார்.

 

இதன் காரணமாக சர்வதேச இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார். 2008-ல் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து, ஏப்ரல் 10, 2008 அன்று இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையே போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் விளையாடினார். சர்வதேச ஒருதின அரங்கில் இவர் ஆடும் முதல் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.

 

இத்தொடரின் மூன்றாவது ஒருதினப்போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி, அணியிலேயே அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். ஒருதின அரங்கில் தனது முதல் அரை சதத்தையும் பதிவு செய்தார். ஆனால் இப்போட்டி மழையின் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது

 

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடி 67 ரன்களை அடித்தார்.

 

இதையடுத்து இந்திய அணியுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் இடம் பிடித்துள்ளார்.

 

வெளியான தேதி: 23 ஆகஸ்டு 2008.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive