Player: | J Mubarak |
DateLine: 27th August 2008
முழுப்பெயர்: ஜேகன் முபாரக்
 
பிறப்பு: 10 ஜனவரி 1981. வாஷிங்டன், அமெரிக்கா. 
மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர் 
அணியில் வீரரின் நிலை: பேட்ஸ்மேன் 
பந்து வீச்சு முறை: இடதுகை சுழற்ப்பந்து வீச்சாளர் 
விளையாடிய அணிகள்: இலங்கை, இலங்கை ஏ, கொழும்பு கிரிக்கெட் கிளப், வயம்பா அணி.அறிமுகம்:
 
டெஸ்ட் போட்டி: ஜூலை 28-31, 2002 அன்று இலங்கை - வங்கதேசம் இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிஒருதினப் போட்டி: நவம்பர் 27, 2002 அன்று இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஆகஸ்டு 17, 2004 அன்று கொழும்பு கிரிக்கெட் கிளப் - பாணந்துறை ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இலங்கை அணியின் பேட்ஸ்மேன். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் பிறந்தவர். இவரது தந்தையான ஆசிஸ் முபாரக், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி இவர் ஒரு விஞ்ஞானியும் ஆவார். 
இலங்கையிலுள்ள ராயல் கல்லூரியில் பள்ளிப்படிப்பை பயின்றார் ஜேகன் முபாரக். இந்த பள்ளியின் கிரிக்கெட் அணியில் விளையாடினார். மூன்று ஆண்டுகள் இப்பள்ளியின் அணிக்காக ஆடினார்.இதையடுத்து வயம்பா அணியிலும், கொழும்பு கிரிக்கெட் கிளப் அணியிலும் சேர்ந்து விளையாடினார். 
இலங்கை ஏ அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடியதால் , 2002-ல் வங்கதேச அணிக்கெதிரான சர்வதேச இலங்கை டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஜூலை 28-31, 2002 அன்று இலங்கை - வங்கதேசம் இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முதாலக சர்வதேச அளவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி 24 ரன்களும், 31 ரன்களும் எடுத்தார். 
இதையடுத்து 2002-03 தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பிடித்து விளையாடினார். ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி 68ரன்கள் எடுத்தார். இதே அணிக்கெதிராக நவம்பர் 27, 2002 அன்று ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் அறிமுகமானார். இவர் அறிமுகமாகிய முதல் ஒருதினப்போட்டியில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். 
இதையடுத்து சில சமயங்களில் அணியில் இடம் பெற்றும், அணியில் இடம் பொறாமலும் இருந்தார். 
2006-ல் நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே வெல்லிங்டனில் நடைபெற்ற ஒருதினப்போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி 53 ரன்கள் குவித்து, ஒரு தின அரங்கில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 
2006-ல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வி.பி. கோப்பை முத்தரப்பு ஒருதினத் தொடரில் இலங்கையும், நியூசிலாந்தும் மோதிய தகுதிச்சுற்றுப் போட்டியில், துவக்க வீரராக களமிறங்கி 62 ரன்கள் குவித்து, ஒரு தின அரங்கில் தனது இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார். இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 
2007-ல் வங்கதேசத்திற்கெதிரான ஒரு அணியில் இடம்பிடித்து, ஜூலை 25, 2007 அன்று இதே அணிக்கெதிராக கொழும்புவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் 4வது வீரராக களமிறங்கி 72 ரன்கள் குவித்தார். இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஒருதின அரங்கில் அதிகபட்ச ரன்னையும் பதிவு செய்தார். இதே ஆண்டில் இங்கிலாந்திற்கெதிரான தொடரில் இடம்பிடித்து விளையாடினார். 
இதையடுத்து இந்திய அணியுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் இடம் பிடித்துள்ளார். 
வெளியான தேதி: 25 ஆகஸ்டு 2008.