CricketArchive

ஸ்டூவர்ட் கிளார்க்
by CricketArchive


Player:SR Clark

DateLine: 1st September 2008

 

முழுப்பெயர்: ஸ்டூவர்ட் ரூபெர்ட் கிளார்க்

 

பிறப்பு: 28 செப்டம்பர் 1975, சதர்லேண்ட், சிட்னி, நியூ சவுத்வேல்ஸ், ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, ஹாம்ப்ஷையர், மிடில்செக்ஸ், கென்ட், நியூ சவுத்வேல்ஸ்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: மார்ச் 16-18, 2006, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: அக்டோபர் 7, 2005 அன்று ஆஸ்திரேலியா - சர்வதேச உலக லெவன் இடையே மெல்போர்னில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜனவரி 9, 2006 அன்று ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

ஆஸ்திரேலிய அணியின் மிதவேகப் பந்து வீச்சாளர். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரத்தின் ஓய்விற்குப் பிறகு அவரது இடத்தை சரியான முறையில் நிரப்பி வருபவர் ஸ்டூவர்ட் கிளார்க்.

 

சர்வதேச அணிக்கு வருவதற்கு முன்பாக நியூ சவுத்வேல்ஸ் அணியில் விளையாடிவர். அக்டோபர் 7, 2005 அன்று ஆஸ்திரேலியா - சர்வதேச உலக லெவன் இடையே மெல்போர்னில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தை ஆரம்பித்தார்.

 

அதன்பிறகு ஒருதினப் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால் 2007 உலகக் கோப்பை அணியிலிருந்தும், அதற்கு முன்பாக நடைபெற்ற காமன்வெல்த் வங்கி தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார்.

 

2006-ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த வேகப்பந்து வேதாளம் கிளென் மெக்ரத்தின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தொடரிலிருந்து அவர் வெளியேறினார். அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் கிளார்க் அத்தொடரில் சேர்க்கப்பட்டார். அறிமுகமானார். இவர் டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் போது இவருக்கு வயது 30.

 

கேப் டவுனில் நடைபெற்ற இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்து, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதுவே இவரது அறிமுக டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் அறிமுகமான முதல் தொடரிலேயே அற்புதமாக பந்துவீசி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

 

இதையடுத்து 2006-07 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தனது திறமையான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இத்தொடரில் கிளென் மெக்ரத், ஷேன் வார்னே போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும், இவர் 26 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இத்தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வென்றது.

 

இத்தொடருக்குப் பின் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான கிளென் மெக்ரத்தும், ஷேன் வார்னேவும் ஓய்வு பெற்றனர். அவர்கள் இல்லாத குறையை தனது திறமையான பந்துவீச்சால் நிவர்த்தி செய்து அணியில் நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

 

இதன்பிறகு ஒருதினப்போட்டிகளிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

 

தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

 

வெளியான தேதி: 01.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive