CricketArchive

ஜேம்ஸ் ஹோப்ஸ்
by CricketArchive


Player:JR Hopes

DateLine: 6th September 2008

 

முழுப்பெயர்: ஜேம்ஸ் ரெட்பெர்ன் ஹோப்ஸ்

 

பிறப்பு: 24 அக்டோபர் 1978, டவுன்ஸ்வில்லே, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

 

அறிமுகம்:
டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை.
ஒருதினப் போட்டி: மார்ச் 1, 2005 அன்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே வெல்லிங்டனில் நடைபெற்ற ஒருதினப் போட்டி.
20 ஓவர் போட்டி: ஜனவரி 13, 2005 அன்று மேற்கு ஆஸ்திரேலியா - பாகிஸ்தானிஸ் இடையே அடிலெய்டில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி.

 

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர். பேட்டிங் செய்வதும், மிதவேகப் பந்து வீசுவதிலும் திறமையானவர். உள்ளூர் போட்டிகளில் குயின்லாந்து அணியின் சார்பாக களமிறங்கி சிறப்பாக விளையாடியவர்.

 

இவர் தனது 13 வயதில் குயின்லாந்து எமெர்ஜிங் பிளேயர்ஸ் அணியில் இடம்பிடித்தார். இதன்பிறகு 19வயதிற்குள்பட்ட ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பிடித்து விளையாடினார்.

 

2005-06 காலகட்டத்தில் , உள்ளூர் தொடர்களான ஐ.என்.ஜி கோப்பை தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புரா கோப்பை தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் இதே திறமையை இவரால் சர்வதேச அளவில் முழுமையாக வெளிக்காட்ட முடியவில்லை.

 

மார்ச் 1, 2005 அன்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே வெல்லிங்டனில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தை ஆரம்பித்தார்.

 

இதையடுத்து 2006-ல் நடைபெற்ற வி.பி தொடரில் இடம்பிடித்து விளையாடினார். இருப்பினும் இவர் ஆடிய 8 வது ஒருதினப் போட்டியில், அதிகபட்சமாக 43 ரன்கள் குவித்தார். இத்தொடருக்கு பின் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருதினத் தொடரில் இடம் பெறவில்லை.

 

பிறகு இவர் தனது உள்ளூர் அணியான குயின்லாந்து அணியில் விளையாடினார். இவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பிராதான வீரராக கருதாததால் அணியின் முக்கிய வீரர்களுக்கான ஒப்ந்தத்தில் இவரை சேர்க்கவில்லை. இக்காரணத்தால் அணிக்குள் சேர்க்கப்படுவதும் விலக்கபடுவதுமாக இருந்தார்.

 

2006-07 ஆண்டில் நடைபெற்ற புரா கோப்பை தொடரில் 553 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, 21 விக்கெட்டுகளையும் வீழ்த்திக் காட்டினார். 2007 உலகக் கோப்பை போட்டியின்போது வாட்சன் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக ஹோப்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் போட்டிகளில் விளையாடவில்லை.

 

இதன்பிறகு செப்டம்பர் 2007-ல் இந்தியா சென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடினார். 7 போட்டிகளில் விளையாடி 136 ரன்கள் குவித்தார். 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே ஆண்டின் இறுதியில் நியூசிலாந்துக்கெதிரான ஒருதின அணியில் விளையாடினார்.

 

பிப்ரவரி 2008-ல், ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் வங்கி முத்தரப்பு தொடர் நடைபெற்றது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து, 9 போட்டிகளில் விளையாடி 1 அரை சதம் உள்பட 193 ரன்கள் எடுத்தார். 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

 

இதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருதினத் தொடரில் இடம்பிடித்து விளையாடினார். தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

 

வெளியான தேதி: 03.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive