Player: | ML Hayden |
DateLine: 6th September 2008
முழுப்பெயர்: மேத்யூ லாரன்ஸ் ஹைடன்
 
பிறப்பு: 29 அக்டோபர் 1971, கிங்கராய், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா. 
மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் 
விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, ஹாம்ப்ஷையர், நார்தாம்ப்டன்ஷையர், சர்வதேச உலக லெவன், சென்னை சூப்பர் கிங்ஸ். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: மார்ச் 4-8, 1994, தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.ஒருதினப் போட்டி: மே 19, 1993 அன்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே மான்செஸ்டரில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூன் 13, 2005 அன்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே சௌதாம்ப்டனில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர். இவரது பலம் அதிரடி ஆட்டம்தான். எதிராளி வீசும் பந்து இவரது பேட்டில் பட்டால் அவ்வளவுதான், பவுண்டரி எல்லையில்தான் கிடக்கும். அந்த அளவிற்கு பேட்டிங் புலி. பீல்டிங்கிலும் அசத்துபவர். ஸ்லிப் பகுதியில் நின்று எதிராளி தட்டும் பந்தை லாவகமாக பிடித்து ஆட்டமிழக்கச் செய்வதில் வல்லவர். 2003 ஆண்டின் சிறந்த வீரர் என்று விஸ்டன் பத்திரிகையின் விருது பெற்றவர். 
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். 1993-ல் தனது சர்வதேச அறிமுகத்தை துவக்கினார். மே 19, 1993 அன்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே மான்செஸ்டரில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் தனது முதல் சர்வதேச ஒருதினப் போட்டியில் ஆடினார். 
1994-ல் தனது டெஸ்ட் அறிமுகத்தை, தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக துவக்கினார். சில போட்டிகளில் விளையாடினாலும், இதன்பிறகு அணியில் சரியான அளவில் இடம் கிடைக்கவில்லை. ஆதலால் உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். தனது திறமையை வளர்த்துக் கொண்டார். 
2001-ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போதுதான் இவரது கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. இச்சுற்றுப்பயணத்தின் போது ஒருதினத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 1 சதம், இரண்டு அரைசதங்கள் உள்பட 303 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார். 3 டெஸட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி ஒரு இரட்டை சதம், ஒரு சதம், இரண்டு அரை சதங்கள் உள்பட 549 ரன்கள் குவித்தார். 
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பாப் சிம்சன் ஒரு வருடத்தில் டெஸ்ட் அரங்கில் அதிகபட்ச ரன்களைக் கடந்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார். அதை, இவ்வருடத்தின் கடைசியில், ஹைடன் தகர்த்தெறிந்தார். 
இதன்பிறகு ஒருதின ஆட்டங்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2003-ல் உலகக் கோப்பை போட்டியில் தனது அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 
அக்டோபர் 2003-ல், ஜிம்பாப்வே அணிக்கெதிராக பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 380 ரன்கள் குவித்து, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாரா எடுத்திருந்த 375 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். மேலும் இத்தொடரில் 2 டெஸ்டில் விளையாடி 501 ரன்கள் குவித்தார். 
ஆஸ்திரேலிய அணி வரலாற்றில், டெஸ்ட் அரங்கில் அதிக சதம் கண்ட வீரர்கள் வரிசையில் ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்து 30 சதங்களுடன் அவ்வரிசையில் இடம்பிடித்துள்ளார். 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 
இதன்பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடினார். தற்போது வங்கதேசத்திற்கு எதிரான ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். 
வெளியான தேதி: 03.09.08 
LATEST SCORES
CURRENT EVENTS
- Cambodia Women in Singapore 2025
- Cyprus in Croatia 2025
- Gibraltar Women in Estonia 2025
- ICC Women's T20 World Cup Europe Division 1 Qualifier 2025
- India in Bangladesh 2025
- New Zealand in Zimbabwe 2025
- Pakistan in United States of America and West Indies 2025
- Pakistan Women in Ireland 2025
- South Africa in Australia 2025/26
- Switzerland in Estonia 2025
- Viking Cup 2025
View all Current Events CLICK HERE
